மழை நீர் சேகரிப்பு வசதி பள்ளிகளுக்கு உத்தரவு
வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் பள்ளி கல்லுாரி வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக். 16ல் துவங்கியது; ஜனவரி வரை நீடிக்கும் வாய்ப்புஉள்ளது. எனவே இந்த மூன்று மாதங்களில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்யுமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதன்படி பள்ளி கல்லுாரி வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்கள் வழியாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.அதில் 'அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆழ்துளை கிணறுகளை சரிவர பராமரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால் அவற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற வேண்டும். உள்ளாட்சிகள் உதவியுடன் இப்பணிகளை உடனடியாக செய்ய வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
No comments
Post a Comment