''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 1, 2019

''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்


 Image result for EXAM

''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்புகல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
 
இது தொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குநர் சார்பில், தேர்வு வழிமுறை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'நடப்பு ஆண்டு முதல் தேர்வு நடக்கும்; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வெண்ணைமலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் படி, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனாலும், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்க, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், கல்வியாளர்கள் ஆலோசனை மற்றும் பிற மாநிலங்களின் நடவடிக்கைகளை பார்த்து, தேர்வு குறித்து ஒருமித்த முடிவு எட்டப்படும். இதனால், இடைநிற்றல் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: