"வாக்குப்பதிவு அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை"
சென்னை:ஏப்.,18ல் ஓட்டுப்பதிவு அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு நடைபெறும் அன்றைய தினத்தில் சில தனியார் பள்ளிகள் இயங்க உள்ளதாக புகார் வந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்.,18ல் தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அன்றைய தினம் தனியார் நிறுவனங்களும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment