பள்ளி அங்கீகாரம் இனி, 'ஆன்லைனில்
*தனியார் பள்ளிகளின், அங்கீகாரம் புதுப்பிப்பு பணிகள், ஆன்லைன் முறையில் நடக்கும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
*தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பணிகள், மாவட்டங்களில் உள்ள மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் வழியாக நடந்து வந்தன
*இந்நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் முறையில், அங்கீகாரம் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கண்ணப்பன் அறிவித்துள்ளார்
*இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, அவர்அனுப்பியுள்ள சுற்றறிக்கை
*இந்த ஆண்டு முதல், அங்கீகாரம் புதுப்பிக்கும் பணிகள், ஆன்லைனில் கல்வி மேலாண்மை இணையதளம் வழியே நடக்கும். இதற்கான வழிமுறைகளை, மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment