Header Ads

Header ADS

அறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு



*அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு கோடைகாலத்தில் இணையதளம் வழியாக பட்டயப்படிப்பு பயில்வது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

*தொடக்கக் கல்வியில் ஊராட்சி ஒன்றிய, நிதி உதவி, சுயநிதி நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் மூலமாக இணையதளம் வழியாக 01.05.2019 முதல் பட்டயப்படிப்பு பயில்வது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்
 
*இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது

*அறிவியல் கற்றல் தரநிலையை உயர்த்தும் வகையில் அரசு, ஊராட்சி ஒன்றிய, நிதி உதவி மற்றும் சுயநிதி நடுநிலை பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகள் கையாளும் அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக மே 1ம் தேதி முதல் இணைய வழியில் பட்டயப்படிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

*இந்த பட்டய படிப்பு பயில அரசு, ஊராட்சி ஒன்றிய, நிதி உதவி மற்றும் சுயநிதி நடுநிலை பள்ளிகளில் 6முதல் 8ம் வகுப்புகள் கையாளும் அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அந்த ஆசிரியர்களின் விபரங்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கடிதத்தில் தெரிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்க வேண்டியுள்ளது

*ஆசிரியர்கள் இப்பட்டயப்படிப்பில் கலந்துகொள்ளத்தக்க வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

*கோடைகாலத்தில் வழக்கமாக மாணவர்களுக்கு பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுகின்ற நிலையில் ஆசிரியர்களுக்கும் இணையதளம் வழியாக பட்டயப்படிப்பு இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.