அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.! எப்படி தெரியுமா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம்
செய்யப்படுவது வழக்கம். அதன்படி, குரூப் 1 தேர்விற்கு 21 முதல் 37 வயது வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 என நிர்ணயிக்கப்பட்டது.
இதில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பில், 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் 21 வயது பூர்த்தியான மற்றும் 37 வயது பூர்த்தியாகாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், 20 வயது
பூர்த்தியானவர்களும் தேர்வு எழுத வாய்ப்பு அமைந்த்துவிட்டது. 37 வயது பூர்த்தியாகாத பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதுகுறித்த விசாரணையின் போது, தேர்வு நடத்த அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க முடியாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது.
இதை
ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, தேர்வுத் தேதியை ஒரு நாள் தள்ளி வெளியிட்ட காரணத்தால்தான் 21 வயதே நிரம்பாத 13,127 பேர் தேர்வெழுத வாய்ப்பைப் பெற்றனர் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியிருக்கிறது.
2018-ஆம் ஆண்டில் டிசம்பர் 31ஆம் தேதி விளம்பரத்தை வெளியிட்டிருந்தால்கூட பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அறிவிப்பு ஒரு நாள் தாமதம் ஆனதால் பலர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
No comments
Post a Comment