அரசு ஊழியருக்கு தேர்வுகள் அறிவிப்பு
சென்னை:அரசு ஊழியர்களின், பதவி உயர்வுக்கான துறை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசின், பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், துறை தேர்வுகள் வழியாக, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவர். நடப்பு ஆண்டிற்கான துறை தேர்வுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நேற்று அறிவித்துள்ளது.இந்த தேர்வுகள், மே, 24 முதல், 31 வரை தேர்வாணையத்தால் நடத்தப்படும். தேர்வில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள், தங்களின் விண்ணப்பங்களை, ஏப்ரல், 6க்குள் சமர்ப்பிக்க வேண்டும். துறை தேர்வுக்கான பாட திட்டம், விதிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட விபரங்களை ,www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
No comments
Post a Comment