பல்கலையில் பேராசிரியர் நியமன அறவிப்பு வெளியீடு
சென்னை:சட்ட பல்கலையில், தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு, அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக அரசின், அம்பேத்கர் சட்ட பல்கலையில், உதவி பேராசிரியர் பதவியில், தற்காலிக நியமனம் செய்யப்பட உள்ளது.
இதற்கு தகுதியானவர்கள், தங்கள் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், சட்ட பல்கலையின், www.tndalu.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம்.ஏப்ரல், 12, மாலை, 5:00 மணி வரை, 'ஆன்லைன்' பதிவை மேற்கொள்ளலாம். தகுதியானவர்கள், ஒப்பந்த அடிப்படையில், சீர்மிகு சட்ட கல்லுாரியில் பணியாற்ற நியமனம் செய்யப்படுவர் என, சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
No comments
Post a Comment