Header Ads

Header ADS

ஏப்ரல் 11-ல் தேர்தல் தொடக்கம்; தேர்தல் விதிமுறைகள் இன்றே அமல் - மேலும் விபரங்கள்


சுனில் அரோரா

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் அறிவித்தார்.


பாஜக

இந்தியாவில் ஐந்து வருட மத்திய பாஜக ஆட்சி வரும் ஜூன் மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும்.  கடந்த சில மாதங்களாகத் தேசிய அளவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைவரும் தங்களின் கூட்டணியை அறிவித்து, தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் பெற்று நேர்காணல் வரை நடத்தி வருகின்றனர். சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடவுள்ள தொகுதிகள் போன்றவற்றையும் அறிவித்துவிட்டனர்.
 
காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தற்போதிலிருந்தே தங்களின் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டனர். இந்திய கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

சுனில் அரோரா

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 17-வது நாடாளுமன்ற தேர்தல்  தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவித்தார். அவர் பேசும் போது,  நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். மேலும் பல்வேறு துறைகளோடும் ஆலோசனை நடத்தி தேர்தலை சுமூகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். அனைத்து மாநிலங்களுக்கும் செங்கு அங்கு தேர்தல் நிலை குறித்து ஆராய்ந்தோம். மாணாவர்களுக்கான தேர்வு, விழாக்கள், வானிலை போன்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் தேர்தலில் 90 கோடி  மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த வருடம் புதிதாக 8.4 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

23 மாநிலங்களிலும் 100 சதவிகிதம் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வக்காளர் பட்டியல் மிகவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  செய்துள்ளோம். அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த முறையான சூழ்நிலை உள்ளதா என ஆராய்ந்த பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. வாக்காளர் அட்டையை அடையாளமாக பயன்படுத்த முடியாது. பிற 11 அட்டைகளை பயன்படுத்தலாம். கடந்த முறை 9 லட்சமாக இருந்த ஓட்டு மையங்கள், இந்த முறை 10 லட்சமாக இருக்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் வைக்க கூடாது. தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் அனைத்து மாநிலங்களிலும் அதிகளவில் குவிக்கப்படவுள்ளனர். பூத் ஸ்லிப்கள் மூலம் வாக்களிக்க முடியாது. அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குகளை உறுதி செய்யும் கருவி பொறுத்தப்படும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு PWD செயலி மூலம் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வழிவகை செய்துள்ளோம்.

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது.  மே 23-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும்என்றார்.

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11

2வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18

3வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23

4வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29

5வது கட்ட தேர்தல் - மே 6

6வது கட்ட தேர்தல் - மே 12

7வது கட்ட தேர்தல் - மே 19
 
தமிழகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத்  தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா , தெலுங்கானா, கேரளா , தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 11 , ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய ஏழு தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே வெளியிடப்படும். மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தனியாக அறிவிக்கப்படும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.