ஜாக்டோ-ஜியோ -வழக்கு-வரும்திங்கள்கிழமை (11.03.19)க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று (04.03.19)பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
வரும்திங்கள்கிழமை (11.03.19)க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஜாக்டோ-ஜியோ வின் (மார்ச்சு04) மதுரைஉயர்நீதிமன்ற வழக்கில்
1)தற்காலிகபணி நீக்கம் இரத்து செய்யப்படவும்,
2)காவல் துறை குற்றவியல் வழக்குகள் இரத்து செய்யப்படவும்,
3)துறைவாரியான 17(பி)ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படவும்,
4)பழிவாங்கும் இடமாறுதல்கள் கைவிடப்படவும்,
5)தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு,
பழைய ஓய்வூதியத்திட்டம் தொடரவும்
வாதிடப்பட்டது.
--------------------------
ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகளை, வினா வடிவில் வரும் 06.03.19(புதன்)
க்குள் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கிடைத்திடும் வகையில் அளித்திட வேண்டும் என்றும்,அரசு தரப்பு வரும் 11.03.19 (திங்கள்)க்குள் பதிலுரை அளித்திட வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் வழிகாட்டல் செய்துள்ளது.
இதற்கான பணிகளை ஜாக்டோ-ஜியோ வழக்கறிஞர்களுடன் இணைந்து மேற்கொள்வதென முடிவாற்றியுள்ளது
.
பாவலர்.
க.மீனாட்சிசுந்தரம்.EX.MLC.,
,பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
No comments
Post a Comment