இஞ்சி நீரை குடித்து வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் உடலில் உண்டாகும்…? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 18, 2019

இஞ்சி நீரை குடித்து வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் உடலில் உண்டாகும்…?



பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது.

இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
 
சர்க்கரை நோய்
இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் பல நலன்கள் நமக்கு உண்டாகும். அதில் ஒன்று தான் சர்க்கரை நோயின் அளவை உடலில் குறைப்பதும். இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க இஞ்சி நீர் உதவும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.


உடல் எடை
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி நீரை குடித்து வருவதன் மூலம் உடல் எடை எளிதில் குறையுமாம். மேலும், உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றவும், இரத்தத்தில் உள்ள அதிக படியான சர்க்கரை அளவை குறைக்க இஞ்சி நீர் உதவும்.


நச்சுக்களை வெளியேற்ற
இஞ்சி நீரை குடித்து வருவதன் மூலம் வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள நச்சுக்களை மிக எளிதாக வெளியேற்றி விடுலாம். மேலும், உங்களின் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் இது பயன்படும். எனவே, அன்றாடம் இஞ்சி நீரை குடித்து வாருங்கள்.

 
முடி மற்றும் முகம்
முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரி செய்ய இஞ்சி நீர் பயன்படும். காரணம் இதிலுள்ள வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் என்பவைதான். இவை முகத்தையும் பொலிவுடன் வைத்து கொள்ள உதவும்.


மூளையின் திறன்
மூளையின் நரம்பு பகுதியை பாதிப்படையாமல் பார்த்து கொள்ள இஞ்சி அருமருந்தாக செயல்படும். மேலும், ஞாபக திறனை அதிகரிக்கவும், மூளையின் செல்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் இஞ்சி நீர் உதவுகிறது. ஆதலால், தொடர்ந்து இஞ்சியை நீரை குடித்து வாருங்கள்.

No comments: