#Breaking#பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு: இனி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!. மாணவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் போன்று, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.
மேலும், 9ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு பின் இது குறித்து அறிவிக்கப்படும்.
மேலும், வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு. கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments
Post a Comment