Header Ads

Header ADS

மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் புதிய திருத்தங்கள்!


பல மத்திய அரசு ஊழியர்கள் வேலை நாட்களில் விடுமுறைகளை எடுக்காமல் அவற்றைச் சேமித்து ஓய்வு பெறும் போது பணமாகப் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.ஆனால் ஏழாவது ஊதியக் குழு இந்த விதிகளில்

திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக 20 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை எடுத்தே தீர வேண்டும்.மேலும் ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் செல்லும் போது 10 நாட்கள் விடுமுறையை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை எடுக்க உரிமை உண்டு.ஆண்டுக்கு 10 நாட்கள் தற்செயல் விடுப்பு, 19 நட்கள் அறிவிக்கப்பட்ட விடுமுறை போன்றவையும் உண்டு. இதுவே பாதுகாப்புத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.தற்போது ஏழாவது ஊதிய குழு விடுப்பு விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வர பரிந்துறைத்து உள்ளதால் என்ன செய்வது என்று மத்திய அரசு ஊழியர்கள் விழித்து வருகின்றனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.