மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு
மத்திய அரசின்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியோர் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ)
நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வில் 16 லட்சம் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பட்டயம் படித்தவர்கள் எழுதினர். அவர்களுக்காக 92 நகரங்களில் 2144
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மேற்கண்ட தேர்வுக்கோன விடைக்குறியீடு டிசம்பர் 28ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்டது. அதில் சந்தேகம் மற்றும் கருத்து கூற விரும்புவோர் தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ இணைய தளமான www. cbseresults.nic.in ல் வெளியிடப்பட்டது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 273 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்விலும், 1 லட்சத்து 26 ஆயிரத்து
968 பேர்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோர் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை சிபிஎஸ்இ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments
Post a Comment