Header Ads

Header ADS

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு


Image result for ஆதரவு


ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்த
போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


இது தொடர்பான தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் அறிவிப்பு:-01.01.2004 முதல் பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை மத்திய அரசுகொண்டுவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
புதிய பங்களிப்பு ஊதியத்தை பங்கு சந்தையில் செலுத்தும் போது, பங்குசந்தைலாபம் ஈட்டினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையானது கிடைக்கும். பங்குசந்தை நட்டத்தில் சென்றால் எங்களின் நிலை என்னவாகும் என்பதைஅரசு புரிந்துக் கொள்ளவேண்டும்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் அனைத்து துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பல கோரிக்கைகள் வைத்தும் போராடியும் அரசுசெவிசாய்க்க மறுக்கிறது.மாறாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நசுக்க நினைத்து, பிரிவு 56 பயன்படுத்தி, அரசு உத்தரவை நடைமுறை படுத்தி ஆட்குறைப்பு செய்து வருங்கால சந்ததியினரின் வேலைவாய்பை கேள்விக்குறி ஆக்கி விட்டது.
அதுமட்டுமின்றி அங்கன்வாடி மையங்களை மூடி, தொடக்க நடுநிலைப்பள்ளிகளை இணைத்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், இடைநிலை ஆசிரியர்களை தகுதி இழக்க செய்து அங்கவாடி மையங்களுக்கு அவர்களை பணியமர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை நசுக்குகின்ற எண்ணத்தை கைவிட்டு, தமிழக முதலமைச்சர்உடனடியாகபேச்சு வார்த்தைக்கு அழைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
 
அப்படி அழைத்து பேசி தீர்வுகாண வில்லை என்றால் வரும்22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு அளித்துஅதில் பங்குபெறும்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.