தமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, January 20, 2019

தமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா?



'அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி கல்விக்கு கட்டணம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும், தமிழ் வழி கல்வியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது. தமிழ் வழி அல்லாத வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சிறியளவில், ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதன் விபரம்:அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழி வகுப்புகளுக்கு, எந்த கட்டணமும் இல்லை.
ஒன்பதாம் வகுப்புக்கு மேல், ஆண்டுக்கு, 50 ரூபாய், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சார்பில், பராமரிப்பு தொகை வசூலிக்கப்படுகிறது.ஆங்கில வழி கல்வியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 200 ரூபாய்; ஒன்பதாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 250 ரூபாய் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2க்கு, 500 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: