Header Ads

Header ADS

விரைவில் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும் - SSA திட்ட இயக்குனர் அறிவிப்பு



'தீக் ஷா' செயலி மூலம், கற்பிக்கும் பள்ளிகளை ஊக்கவிக்கவும், பாடத்திட்ட கருத்துக்கள் இணைப்பது குறித்த கருத்துக்கள் பெறவும், பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும் என, கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
 
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், 'க்யூ.ஆர்.,' கோடு வாயிலாக, கற்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும் பாடத்திட்ட கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும்.இதோடு 'தீக் ஷா' செயலியில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கி வகுப்பு கையாளுதல், ஆன்லைன் தேர்வு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 Image result for VISIT IMAGE
இத்திட்டம் பள்ளிகளில் செயல்படும் விதத்தை, தீக் ஷா திட்ட குழுவினர், பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தவுள்ளதாக, கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.'சமக்ர சிஷ்யா அபியான்' கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய அரசு உருவாக்கிய, தீக் ஷா செயலியில், மாநில பாடத்திட்டத்திற்கான, டிஜிட்டல் கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
 
இதை பயன்படுத்தும் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களிடம் இருந்து, புதிதாக இச்செயலியில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்த, கருத்துக்கள் பெறவும், பள்ளிகளில் ஆய்வுமேற்கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.