Header Ads

Header ADS

நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்



நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
 
நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது.எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
 
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.