அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை
'அரசு அலுவலக வளாகங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்'
என,
மத்திய சுகாதாரத் துறை செயலர், பிரித்தி சுதன், அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநில அரசின் கீழ் செயல்படும், அனைத்து பொதுத் துறை அலுவலக வளாகங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும். புகையிலை தடை, மத்திய அரசின், 'நிர்மான் பவன்' அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை, அனைத்து மாநிலங்களும், பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment