Header Ads

Header ADS

பள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை!



பள்ளிகளில், மாணவியர், தலையில் பூ சூடவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 பூ சூடவும், கொலுசு போடவும், தடை!
 
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,அனைத்து மாணவர்களும், மாணவியரும், பள்ளி நாட்களில் சீருடை மட்டுமே, அணிந்து செல்ல வேண்டும். சில பள்ளிகளில், காலணிகளும், பல பள்ளிகளில், 'ஷூ'அணிந்தும் செல்லவேண்டும் என்பது விதி.

அதேபோல்,நர்சரி பள்ளி குழந்தைகள்,தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிந்து செல்லவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில அரசு பள்ளிகளில், மாணவியர் தலையில் பூ வைத்தும், கொலுசு அணிந்தும் வருகின்றனர். சில மாணவர்கள், கைகளில், பல வண்ண பட்டை மற்றும் கயிறு அணிந்து வரு கின்றனர்.இதனால், மாணவ - மாணவியர் இடையே பிரச்னை ஏற்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியர் பூ சூடி வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த பட்டு உள்ளனர்.அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ், டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள் அணியவும்,

தேவையற்ற அணிகலன்கள் அணிவதற் கும், மருதாணி வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில், ஏற்கனவே இந்த கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.