Header Ads

Header ADS

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கிய, கல்வித்துறையினர் அவர்களை எச்சரிக்கை

செய்து அனுப்பினர்.

  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில், முதல், 10 இடங்களுக்குள் வேலூர் மாவட்டம் இடம்பெற, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரு சில பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, காலாண்டு தேர்வு, மாதாந்திர தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அரக்கோணம் அடுத்த, திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின், தமிழ் விடைத்தாள், இரண்டு விதமான பேனாக்களால் எழுதப்பட்டிருந்தன. மேலும், 20 மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றதால், வேறு மாணவர்களைக் கொண்டு, சரியான விடை எழுத வைத்து, கூடுதல் மதிப்பெண் வழங்கியது, தெரியவந்தது. இதேபோல், மாவட்டம் முழுவதும், 120 அரசு பள்ளிகளில் நடந்துள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை அழைத்து, இதுபோல செய்யமாட்டோம் என, எழுத்து மூலமாக உறுதி பெற்று, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.