B.E., B.Tech., படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 3, 2018

B.E., B.Tech., படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி



மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான என்ஜினீயர் தேர்வு - 2019 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1.1.2019-ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி:

பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடம்:

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

www.upsconline.nic.in என்ற வலைத்தளத்த்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2018

மேலும் விவரங்கள் அறிய

CLICK HERE TO VIEW THE NOTIFICATIONஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்

No comments: