Header Ads

Header ADS

படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க 25 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு,வாட்ச் பரிசு :படிக்காத வாட்ச் கடை உரிமையாளர் அசத்தல்!



பள்ளிகளில், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, மேட்டூரைச் சேர்ந்த, படிக்காத வாட்ச் கடை உரிமையாளர், 25 ஆண்டுகளாக பரிசு வழங்கி ஊக்குவிக்கிறார்.


மேட்டூர், பாப்ஜி வாட்ச் கடை உரிமையாளர் பாஷாஜான், 65.


இவர், கடந்த, 25 ஆண்டுகளாக, மேட்டூர் அரசு பள்ளியில், பிளஸ் 2, 10ம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுகளுக்கு, வாட்ச் வழங்கி ஊக்குவிக்கிறார்.
 

தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், அரசு பள்ளிகளுக்கு, பெரிய கடிகாரங்களை இலவசமாக வழங்குகிறார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது.


என் பூர்வீகம், ஈரோடு மாவட்டம், அந்தியூர். நான்கு வயதில், தந்தை அஜீஸ் இறந்து விட்டார்.


 தாய் வழி தாத்தா பாப்ஜி, மேட்டூரில் வசித்தார். அவரது வீட்டுக்கு, தாய் ஜம்ரூ பீவியும், நானும் செல்ல முடிவு செய்தோம். அப்போது, பஸ்சில் செல்லவோ, சாப்பாட்டுக்கோ கூட, எங்களிடம் பணமில்லை.


 தந்தையின் நண்பர்கள், தங்களுக்குள் பணம் வசூலித்து, எங்களுக்கு கொடுத்து உதவினர். அந்த பணத்தில் மேட்டூர் வந்தோம். தாத்தா வீடு மிகச்சிறியது. அங்கு வசிக்க முடியவில்லை.


 அந்த சமயத்தில், நல்லம்மாள் என்பவர், தங்கள் தொழுவத்தில் ஒரு பகுதியை, எங்களுக்கு ஒதுக்கி கொடுத்தார். அங்கு வசித்துக்கொண்டு, தாத்தா கடையில் வாட்ச் பழுது பார்க்க கற்றேன். வறுமையால், பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை.

(SSTA)

தாத்தா இறந்துவிட, 14 வயதில், மேட்டூரில், ஒரு இடத்தில் சாலையோரம் பெஞ்ச் போட்டு அமர்ந்து, வாட்ச் பழுது பார்த்துக்கொடுத்தேன். படிப்படியாக உயர்த்து, வாட்ச் கடை வைத்தேன். 40 ஆண்டுகளாக, கடை நடத்தி வருகிறேன்.


 மனைவி லைலாஜான், முகமது அலி, சவுகத் அலி என இரு மகன்கள், அன்சரி பானு என்ற மகள் உள்ளனர். மகன்கள் இருவரும் எம்.காம்., படித்துவிட்டு கடையை கவனிக்கின்றனர்.

பள்ளிக்கு சென்று படிக்க முடியாத ஏக்கம், என் மனதில் சிறுவயதில் இருந்தது. இதனால், நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை ஊக்குவிக்க முடிவு செய்தேன்.


அதற்காக, 25 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, வாட்ச் பரிசு வழங்குவேன். மருத்துவமனை வார்டுகளில் கடிகாரம் இருப்பதில்லை.


தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருந்து சாப்பிடும் நேரத்தை தெரிந்துகொள்ள, மருத்துவமனைகளுக்கு இலவசமாக கடிகாரம் வழங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பள்ளிக்கு செல்லாவிட்டாலும், பாஷாஜான் தமிழ் எழுத, படிக்க கற்றுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.