Header Ads

Header ADS

'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்து உள்ளது.



பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., நடத்தி வந்தது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் எழுந்ததால், தேர்வு நடத்தும் பொறுப்பு, என்.டி..,விடம் ஒப்படைக்கப்பட்டது

Image result for neet
அடுத்த ஆண்டு, மே, 5ம் தேதி, நீட் தேர்வை, என்.டி.., நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 1ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி..,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆதார் கட்டாயம் இல்லை.'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், தயாராகும் வினாத்தாளில் பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும்' என, மத்திய மனிதவளத் துறை அமைச்சர், ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.