Header Ads

Header ADS

உங்களுடைய குணநலன்கள் பற்றி உங்கள் இரத்த பிரிவு சொல்வது என்ன?


ஒருவருடைய குணம் என்பது அவரவர் தனிப்பட்ட பண்புநலன்கள் சார்ந்தது. ஆனால் அவர்களுடைய மரபணுக்களில் இருந்தும் அவர்கள் சில தனித்துவமான குணங்களை பெறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவர் பிறந்த நேரம், பிறந்த தேதி முதலியவை கொண்டு ஒருவரின் வருங்காலம் 
கணிக்கப்படுகிறது. ஆனால் மருத்துவரீதியாக ஒருவரின் குணநலன்கள் அவர்களின் இரத்த வகையை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்த பிரிவை சேர்ந்தவருக்கு ஒரு சில குணங்கள் பொதுவாய் இருக்கும். இந்த பதிவில் ஒவ்வொரு இரத்த பிரிவை சேர்ந்தவரும் என்னென்ன குணநலன்களுடன் இருப்பார் என்பதை பார்க்கலாம்.
Image result for blood group images
 A இரத்த பிரிவு

 A இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் பொறுமைசாலிகளாக இருப்பார்கள், மேலும் அவர்கள் உணர்ச்சியை எளிதில் மறைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். A இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் எதிலும் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். மற்ற குணங்கள் கற்பனைதிறன் மிக்கவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள். 

 A பிரிவின் சமூக வாழ்க்கை இவர்கள் வீண் விவாதங்களிலும். மோதல்களிலும் ஈடுபட விரும்பமாட்டார்கள். அதேசமயம் நம்பகத்தன்மை உடையவர்களாகவும், மனதளவில் எளிதில் காயப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிறிய நட்பு வட்டத்தை மட்டுமே விரும்புவார்கள், அதிக நபர்களுடன் பழகுவது பிடிக்காது. இவர்களை காயப்படுத்தினால் மிகவும் கோபப்படுவார்கள்.

A பிரிவின் பணி வாழ்க்கை அவர்கள் வேலையை பொறுத்தவரை மிகவும் நம்பகத்தன்மை மிக்கவர்கள். அவர்கள் அனைத்து வேலையும் கச்சிதமாக இருக்க வேண்டுமென்றும், தனது வேலை சிறப்பாக இருக்க வேண்டுமென்றும் நினைப்பார்கள். வேலையில் எளிதில் மனஅழுத்தம் மிக்கவர்கள்.

இரத்த பிரிவு B

B இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், தனித்துவம் மிக்கவர்களாகவும், உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள். சிலசமயங்களில் பொறுப்பற்றவர்களாகவும், பொறுமையில்லாமல் நடந்துகொள்வார்கள். இவர்கள் அளவுக்கதிகமாக சுதந்திரத்தை விரும்புவார்கள் மற்றவர்களின் கருத்துக்களை நினைத்து ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

B பிரிவின் சமூக வாழ்க்கை இவர்கள் நண்பர்களுடன் இருப்பதை அதிகம் விரும்புவார்கள், ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்வார்கள். சிலசமயம் இவர்களுடன் இருப்பது சற்று கடினம்தான், ஏனெனில் அவர்கள் தான் விரும்பும் செயலைத்தான் செய்ய விரும்புவார்கள், மற்றவர்களின் கருத்துக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.

B பிரிவின் பணி வாழ்க்கை இவர்கள் விதிகளை பின்பற்ற விரும்பமாட்டார்கள், அவர்கள் விரும்புவதைத்தான் செய்ய நினைப்பார்கள், வேலையிலும் அப்படித்தான். இவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்களின் தனி வழியில் சென்றே வேலையை வெற்றிகரமாக முடிப்பார்கள். இவர்களின் ஆசைகளும், இலட்சியங்களும் எப்பொழுதும் உயர்ந்ததாகவே இருக்கும்.

AB இரத்த பிரிவு

AB இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் பொதுவாக நட்பாகவும், கற்பனைத்திறன் மிக்கவர்களாகவும், புத்திசாலிகளாகவும், சுவாரஸ்யமானவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், சிலசமயம் சுயநலம் மிக்கவர்களாகவும் நடந்து கொள்வார்கள். AB இரத்த பிரிவின் சமூக வாழ்க்கை இந்த அரிய வகை இரத்த பிரிவை கொண்டவர்கள் பெரும்பாலும் அவர்களின் மனது சொல்வதை விட மூளை சொல்வதையே கேட்டு நடப்பார்கள். இதனால் அவர்களை பற்றி கணிப்பது என்பது கடினமானது, அவர்கள் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.

AB இரத்த பிரிவின் பணி வாழ்க்கை இவர்களுடன் பணி செய்வது மிகவும் எளிதானது, ஆனால் சிறிய விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவார்கள். இது அவர்களின் மொத்த வேலையை பாதிக்கும்.

 இரத்த பிரிவு O

 O இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் பொதுவாக தன்னம்பிக்கை மிக்கவர்கள், தலைமை பண்பு மிக்கவர்கள், குறிப்பாக உயர்ந்த குறிக்கோளுடையவர்கள். அதேசமயம் உணர்ச்சிவச படுதல், ஆக்ரோஷம், நாடகத்தன்மை போன்ற சில குணங்களும்இருக்கும்.

O இரத்த பிரிவின் சமூக வாழ்க்கை O இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் எப்பொழுதும் தான் இருக்கும் இடத்தில் தான்தான் தலைமையிடத்தில் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். சூதாட்டத்தில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ரிஸ்க் எடுக்க பயப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.

O இரத்த பிரிவின் பணி வாழ்க்கை
வேலை மற்றும் வெற்றிக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். ஆனால் எளிதில் மற்ற விஷயங்களால் திசைமாற்றம் அடைந்து விடுவார்கள். சிலசமயம் வேலையை முடிக்க அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.