தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 10, 2018

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம்!


ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் அபராதம் விதித்துள்ளது.

 
மார்ச் காலாண்டில் பல்வேறு சேவை தரநிலைகளிலிருந்து தவறியதால் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அபராதம் விதித்துள்ளது. பல்வேறு அளவுருக்கள் மற்றும் சேவைகள் குறித்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்களும் அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. நடப்பு ஆண்டின் மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ரூ.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை, நிறுவனம் பதிலளித்துள்ள அழைப்புகளின் விகிதம் போன்ற சேவை தரநிலைகளின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ட்ராய் அபராதம் விதித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐடியா நிறுவனத்துக்கு ரூ.12.5 லட்சமும், வோடஃபோன் நிறுவனத்துக்கு ரூ.4 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது இணைந்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: