Header Ads

Header ADS

க்யூ.ஆர்., கோடு' வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறதா? தீக் ஷாஆப்' மூலம், வீடியோ கருத்துகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உத்தரவு


முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தி, மாணவர்களின்
கற்றல் நிலை, வாசிப்பு திறனை பரிசோதிக்க இயக்குனர் உத்தரவு*

 
*கோவை : புதிதாக மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டத்துக்கு, 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்தப்படுகிறதா என்பதை, கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது*


*தமிழகத்தில் ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது*


 *ஒவ்வொரு பாடத்திற்கும் பிரத்யேகமாக, க்யூ. ஆர்., கோடு அச்சிடப்பட்டுள்ளதோடு, பாடக்கருத்துகள் சார்ந்த கூடுதல் தகவல்களை, பதிவிறக்க வசதி உள்ளது.'தீக் ஷாஆப்' மூலம், வீடியோ கருத்துகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது*


 *இதன்படி, முதல்பருவ பாடத்திட்டம் கையாளப்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், இரண்டாம் பருவ பாடப்புத்தகம் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்*

 
*இப்பாடங்களுக்கு, வகுப்பு கையாளப்படும் விதம் குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் நிலை, வாசிப்பு திறனை பரிசோதிக்க வேண்டும்*


 *இதில் பின்தங்கிய மாணவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, இயக்குனர் இளங்கோவன்,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.