Header Ads

Header ADS

மாணவர் பிறந்த தேதி சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்த சான்றிதழில் உள்ள, பிறந்த தேதி அதிகாரபூர்வமானதாக கருதப்படுகிறது.

எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ்களில், பிறந்த தேதி தவறாக உள்ளவர்கள், திருத்தம் கேட்டு, தேர்வுத்துறைக்குவிண்ணப்பிக்கின்றனர். இந்நிலையில், புதிய சான்றிதழ்களை, தவறுகள் இன்றி வழங்க, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் மற்றும் சுய விபரங்களை, அரசு தேர்வுத்துறையின் இணையத்தில், சரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, 2019 மார்ச், 1ல், 14 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

அதேபோல, பிறந்த தேதியை பல முறை சரிபார்த்து, தவறின்றி பதிவு செய்ய வேண்டும். வரும் காலங்களில், சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்ற அனுமதிக்கப்படாது. எனவே, தலைமை ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.