அரசியல் கட்சி கூட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திரிபுரா மீன்வளத்துறை அதிகாரியான லிபிகா பால் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற இருந்தார். ஓய்வுபெறுவதற்கு 4 நாள்கள் இருந்த நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட காரணத்துக்காகவும், பாஜகவுக்கு எதிராக சமூகவலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட காரணத்துக்காகவும் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக விசாரணை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டதை வைத்து மட்டும், அரசியலில் அரசு ஊழியர் ஈடுபாடு கொண்டுள்ளார் என முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்தது. அதேபோல் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
No comments
Post a Comment