முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான தீர்வு
நம்மில் பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும. மேலும் நரம்புகளில் உள்ள பிரச்சனையால் தான் முதுகு வலி மற்றும் இடுப்பு
வலி உண்டாகின்றன.
அத்தகைய முதுகு மற்றும் இடுப்பு வலியை நிரந்தரமாக விரட்ட உதவும் இயற்கை பானத்தைக் எப்படி தயாரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால்-
தேவையான அளவு
பூண்டு- 4 பற்கள்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும்.
குடிக்கும் முறை
இந்த
பாலை தினமும் குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம். மேலும் இதனை குடிப்பதால் இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைவதை உணர முடியும்.
மேலும் வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும் செரிமான திரவத்தை தூண்டி உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
ரத்த
அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி ரத்தோட்டத்தை சீராக்கி பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால் விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
No comments
Post a Comment