பரியேறும் பெருமாள் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை-
பரியேறும் பெருமாள்' பார்த்தேன். மிக மிக முக்கியமான படம். முதல் காட்சியில் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை. இந்த நிலமெங்கும் விஷம் போல் பரவியிருக்கும் சாதியத்தின் முகத்தில் மோதி மிதிக்கிறது இந்தப்
படைப்பு. இது முன் வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் நம் முன் பூதம் போல் தோன்றி, உறக்கத்தை கெடுக்கும். நம் மனசாட்சியை உலுக்கும். சொல்லத் தயங்குகிற, சொல்லியே ஆக வேண்டிய இந்த மண்ணின் கதையை மிக நேர்மையாக, துணிவாகப் பேசுகிறான் இந்தப் பரியன். கருப்பியில் தொடங்கி கதை நாயகனின் அப்பாவாக வருகிறவர் வரை ஒவ்வொருவரும் நமது உயிர்கள். படம் முடிந்த பிறகு தண்டவாளத்தில் கிடக்கும் கருப்பியாகவும் மேசையில் படபடக்கும் மல்லிகையாகவும் மனம் மாறிவிடும்.
முதல் படைப்பிலேயே இந்த அற்புதத்தை நிகழ்த்திய தம்பி மாரி செல்வராஜ்க்கு நிறைய ப்ரியங்கள். இந்த மாதிரி படத்தை தயாரித்திருப்பது இந்த மண்ணுக்கும் சமூகத்துக்கும் தோழன் பா.ரஞ்சித் செய்திருக்கும் முக்கியமான பங்களிப்பு.நேர்த்தியான உருவாக்கத்தில் தோள் கொடுத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்! பரியனைக் கொண்டாடு
Director Raju Murugan
No comments
Post a Comment