தர ஊதிய ஆணையை அமல்படுத்த ஆசிரியர்கள் மனு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 20, 2018

தர ஊதிய ஆணையை அமல்படுத்த ஆசிரியர்கள் மனு


தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரிடம் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று மனு
கொடுத்தனர்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு இல்லா பணியிடத்தில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையில் ஒன்றான தர ஊதியம் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. அந்த ஆணையின்படி, தர ஊதியம் விரைவில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று கேட்டு தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகனை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ஜெனார்த்தனன் கூறியதாவது: உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி பதவி உயர்வு இல்லா பணியிடத்தில் பணியாற்றி  வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் கடந்த 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.அந்த வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400 வழங்கவும், 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப் பயன் பெறும் வகையிலும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்த அரசாணையை உடனடியாகபள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்என்று கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

No comments: