ஆப்பிளின் பேட்டரி ரகசியம் கசிந்தது! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 20, 2018

ஆப்பிளின் பேட்டரி ரகசியம் கசிந்தது!


சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளின் பேட்டரித் திறன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான புதிய படைப்புகள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன. iPhone XS, iPhone XS Max என்ற உயர் ரக -போன்களின் வரிசையில் iPhone XR என்ற குறைந்த விலை -போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில்
பேட்டரித் திறன் உள்ளிட்ட சில அம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் ஆப்பிள் ரகசியம் காத்து வந்தது.
 Image result for apple i phone
இந்தியாவைப் போலவே ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் சீனாவிலும் இந்த புதிய -போன் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ஆனால் அங்கு பேட்டரித் திறன் குறித்த தகவல்களை வெளியிட்டால்தான் அனுமதி கிடைக்கும் என்பதால் தற்போது ஆப்பிளின் பேட்டரி ரகசியம் வெளிவந்துள்ளது.

அதன்படி தற்போது வெளிவந்துள்ள XS Max, -போன் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 3174 mAh பேட்டரித் திறனைக் கொண்டுள்ளது. XS, XR -போன்கள் முறையே 2,658 mAh மற்றும் 2,942 mAh பேட்டரித் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு வெளியான ஆப்பிள் X (2716 mAh) விட தற்போது வெளியாகியுள்ள XS மாடலில் பேட்டரித் திறன் குறைவாகவே உள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள XS, ஆப்பிள் X விட பேட்டரித் திறனில் 30 நிமிடங்களும், டாக் டைமில் 1 மணி நேரமும் நீடித்து உழைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. வடிவத்தைப் பொறுத்தவரை ஆப்பிள் XS, ஆப்பிள் X இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments: