Header Ads

Header ADS

தேர்வு விடுமுறையில் 'ரிலாக்சா' விடுங்க! சிறப்பு வகுப்புகள் நடத்த தடை*


*காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது*

*மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளில் சிறப்பு வகுப்பு
நடத்த கூடாதென கடந்த மாதம் உத்தரவிட்டார்*
 Image result for no special classes image
*அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் 'காலையில், பள்ளி துவங்கும் முன்பும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக' குறிப்பிட்டிருந்தார்.அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்*
*பள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும் என, அறிவுறுத்தினார். இச்சுற்றறிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது*

*தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடா தென, சி...,க்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்*

*கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளும், சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி செயல்படும் பள்ளி நிர்வாகத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி..., அய்யண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்*

*கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'காலாண்டு தேர்வுக்குப் பின், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். விடுமுறை தினங்களில், பள்ளி நிர்வாக பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்*

*கல்வித்துறை உத்தரவை மீறி, சீருடையுடனோ, சீருடை அல்லாமலோ மாணவர்களை வரவழைப்பது, சிறப்பு வகுப்பு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.