Header Ads

Header ADS

தரம் உயர்த்திய 150 பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் இல்லை!!


தரம் உயர்த்திய 150 பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் வழங்காததால், அப்பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50, இந்த ஆண்டு 100 என மொத்தம் 150 நடுநிலை பள்ளிகள்,
உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

 Image result for lab images
தரம் உயர்த்தப்படும் போது 25 ஆயிரம் ரூபாய் அல்லது செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் வழங்கப்படும். ஆனால் இன்னும் 
பொருட்கள் வழங்கவில்லை.அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண் வழங்கப்படும். கடந்த ஆண்டு செய்முறை தேர்வுகள் நடத்தாமலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

தற்போது காலாண்டு தேர்வு நடக்கும் நிலையில், ஆய்வக பொருட்கள் இல்லாமல் எப்படி செய்முறை தேர்வு நடத்துவது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.''ஆய்வக பொருட்கள் கேட்டு பல முறை பள்ளி கல்விதுறைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கையும் இல்லை,'' என உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செய்தி தொடர்பு செயலர் முருகேசன் தெரிவித்தார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.