Header Ads

Header ADS

``3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு!" - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்


 நெருக்கடி மற்றும் போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி, 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இது, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்
மட்டுமன்றி, பல ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் அதிகரித்து, அரசுப் பள்ளியின் சதவிகிதம் படிப்படியாகக் குறையும் அபாயம் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் பணம் செலுத்தி படிக்கவைக்க இயலாத பெற்றோர்கள், இனி எந்த மாதிரியான முடிவை எடுக்கப்பார்கள். குழந்தைகளின் புத்தகக் கனவு என்னவாகும் என்பது குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.
அரசுப்பள்ளி

அரசுப்பள்ளி

சுடர் நடராஜ்
`சுடர்' நடராஜ், கல்வியாளர்
சுடர் நடராஜ்``அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கும் காரணத்தினால், பள்ளிகளை மூடறாங்க. அப்படி மூடும் நிலைமைக்கு ஏன் வந்தது என்பதை யோசிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை வீதம் அதிகளவில் இல்லை என்றால், அதற்குக் காரணமும் அரசாங்கமே. உதாரணமாக... சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் என்ற ஊர் இருக்கு. அங்கே, நடுப்பலை என்ற பள்ளியில் ரெண்டு குழந்தைகளே இருந்தாங்க. மற்ற குழந்தைகள் எங்கே. கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிக்குப் போய்ட்டாங்க. ஏன் இந்த முடிவை எடுத்தாங்கன்னு ஊர்மக்களைக் கூப்பிட்டுக் கேட்டோம். `இங்கிலீஷ் மீடியம் இருந்தால், இங்கேயே படிக்கவைக்கிறோம்'னு சொன்னாங்க. நாங்களே தகுதியான இரண்டு ஆசிரியர்களை நியமிச்சதும், 10 பசங்க வந்தாங்க. அப்புறம், 15 மாறிச்சு. பிறகு, அரசாங்கத்திலிருந்து ஓர்  ஆசிரியரை நியமிச்சாங்க. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாச்சு. ஆக, வீட்டுக்கு அருகில் பள்ளி என்கிற முறையில், ஆங்காங்கே இருக்கும் பசங்களை அந்தந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு அரசு முயற்சி செய்யணும். தேவையான ஆசிரியர்களை நியமிக்கணும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கணும். ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் கல்வி மேலாண்மைக் குழுவைப் பலப்படுத்தணும். இதையெல்லாம் செய்தால், அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்கலாம். அதேசமயம் 5, 7 என மாணவர்கள் இருக்கும் பள்ளியை அருகிலுள்ள வேறொரு பள்ளியில் அரசு சேர்க்குது. அதைச் செய்யலாம். ஆசிரியர்களின் ஈடுபாட்டுடன் மக்களை வென்றெடுத்திருந்தா, இந்தச் சூழல் வராமல் தடுத்திருக்கலாம். அரசுப் பள்ளிகளுக்கு அருகில் தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியே கொடுக்கக் கூடாது. அந்தந்த ஊர்களில் இருக்கும் குழந்தைகள், ஆங்காங்கே இருக்கும் அரசுப் பள்ளியில் பயில்வதை நடைமுறைப்படுத்தணும். அரசுப் பள்ளி என்பது, மக்கள் பள்ளி. அதனால், எங்கள் குழந்தைகளை இங்கேதான் படிக்கவைப்போம் என்கிற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும்.''

கல்விமணி, கல்வியாளர்
கல்விமணி
கல்விமணிமாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சிக்கல்தான். அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே போட்டி நடத்தி, தனித்திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றாலும், அதற்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். ஆனால், அரசுப் பள்ளிகளை மூடி, ஏழை எளிய மாணவர்களின் கனவுகளைச் சிதைக்கிறது எப்படிச் சரியாக இருக்கும். முன்னாடி இதே மாதிரி பள்ளிகளை மூடப்போறோம்னு அறிவிச்சு, ஓராண்டுக்குத் தள்ளிவெச்சாங்க. அதேமாதிரி இந்த முடிவை அரசாங்கம் தள்ளிவெச்சா சரியா இருக்கும். அதுக்குள்ளே தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தணும். அரசாங்கம், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சேர்ந்து, தாய்மொழிக் கல்வி குறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யணும். ஆங்கில வழியில் படிக்கிறதுதான் முக்கியம்னு நினைக்கும் பெற்றோர்களுக்குத் தாய்மொழிக் கல்வியில் படிச்சாலும், வெளிநாடு வரை சென்று சாதிக்கும் மாணவர்கள் இருக்காங்க என்பதைப் பெற்றோர்களுக்குப் புரியவைக்கணும். தாய்மொழிக் கல்வியைச் சரியாகக் கற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை உணர்த்தணும். ஆங்கிலம் மொழி அவசியம்தான். ஆனால், தாய்மொழிக் கல்வி அதைவிட அவசியம். அரசுப் பள்ளியில் படிச்சாலும் முன்னேற முடியும் என்ற தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தணும்.''
நன்றி -விகடன்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.