Header Ads

Header ADS

அறிந்துக்கொள்வோம்; TRP-Rating என்றால் என்ன?


தொலைகாட்சி தரத்தினை நிர்ணயிக்கும் கருவியாக கருதப்படும் TRP-Rating
என்றால் என்ன தெரியுமா?
 

TRP (Target Rating Point) என்பது குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி சேனல் பெரும் அளவீட்டு புள்ளிகள் ஆகும். அதாவது, மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டு அளவாகும்.
 
குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அல்லது தொடரினை பார்த்து ரசித்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே அந்த தொலைக்காட்சி சேனலின் மதிப்பீட்டுப் புள்ளிகளாக கணக்கிடப்படுகிறது.

இந்த அளவீடு ஆனது பொதுவாக இரண்டு வகைகளில் மேற்கொள்ளப் படுகிறது...
 
frequency monitoring: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பிரத்தியேக கருவியினை பொருத்தி, தொடர்ச்சியாக கண்காணித்து அளவிடப்படுவது. நிகழ் நேரத்தில் குறிப்பிட்ட சேனலினை எத்தனை நபர்கள் பார்க்கின்றனர் என்பதினை அடிப்படையாக கொண்டு இந்த வகை அளவீடு மேற்கொள்ளப் படுகிறது.

picture matching technique: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளில் பிரத்தியேகமாக கருவிகை பொருத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில் புகைப்படங்கள் எடுத்து, இந்த புகைப்படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்த சேனலுக்கு அதிகமாக நேயர்கள் இருக்கின்றனர் என அளவிடப்படும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.