Header Ads

Header ADS

School Morning Prayer Activities - 16.08.2018







பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

உரை:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

 
பழமொழி :


All things come to those who wait

பொறுத்தவர் பூமி ஆள்வார்

பொன்மொழி:

அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.

- சர்ச்சில்.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.விட்டிகல்சர் என்பது?
திராட்சை வளர்த்தல்

2.”தெற்காசியாவின் டெட்ராய்ட்என்று அழைக்கப்படுவது?
சென்னை

நீதிக்கதை :

 
 
தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog


அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.  அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.


அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.

தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.

"நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.

தேள் தவளையின் முதுகில் கொட்டியது.  அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.


தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது தவளை.

ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும்.  இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.
ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள்,  மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.

கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.

தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.  தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

நீதி:
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.  அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கேடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.

இன்றைய செய்தி துளிகள் :

1.சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 

2 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யப்படுவதாக சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

2.உலகளவில் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது : சுதந்திர தின விழாவில் மோடி உரை.

 3.தமிழகம் முழுவதும் ரூ.22,439 கோடி மதிப்பில் 41,031 திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன : முதல்வர் பழனிசாமி


 

  4. 5 ஆண்டுகளுக்கு பின் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு

5.ஆசியப் போட்டி 2018 தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் பல்வேறு நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அதிகாரிகள் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் குவியத் தொடங்கியுள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.