Header Ads

Header ADS

மூன்றாவது மகப்பேறு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


அரசு பெண் ஊழியருக்கு 3வது பிரசவத்திற்கு விடுமுறை மறுப்பது சட்ட
விரோதம்என்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஊர்மிளா மனீஷ். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. 3வது முறையாக கர்ப்பிணியான ஊர்மிளா, பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் சர்மா, 3வது பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க மறுக்கும் அரசின் விதிமுறை சட்ட விரோதமானது. மனுதாரருக்கு மனிதாபிமான அடிப்படையில் பேறுகால விடுமுறை வழங்க வேண்டும்என உத்தரவிட்டார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.