நாடு முழுவதும் 24 லட்சம் அரசு காலி பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்!
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களின்
அடிப்படையிலான புள்ளி விபரத்தின்படி நாடு முழுவதும்24 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.இதில் மிக அதிபட்சமாக மத்திய, மாநில மற்றும் யூனியன்பிரதேசங்களில் பள்ளிகளில் 10.1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காவல் துறையில் 5.4 லட்சம் இடங்களும், ரயில்வேயில் 2.4 லட்சம் இடங்களும், அங்கன்வாடி பணியாளர்களில் 2.2 லட்சம் இடங்களும், சுகாதார மையங்களில் 1.5 லட்சம் இடங்களும், ராணுவத்தில் 62,084 இடங்களும், துணை ராணுவத்தில் 61,509 இடங்களும், தபால் துறையில் 54,263 இடங்களும், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 21,740 இடங்களும், உயர்கல்வித்துறையில் 12,020 இடங்களும், கோர்ட்களில் 5853 இடங்களும் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.
No comments
Post a Comment