மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் நடத்தியதன் விளைவாக ஆறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன !!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சென்ற திங்கட்கிழமை (06.08.2018) அன்று திருவண்ணாமலை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் நடத்தியதன் விளைவாக ஆறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அவைகளைச் சரி செய்யும் வேலைகளும் தொடங்கியுள்ளன.
1)திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
செயல்படாத Ceo portal App-ஐ கண்காணித்து வந்த 48 Non Teaching Staff-களும்,(06.08.2018) திங்கள்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கே அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
2)திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் எடை போட்டு விற்றது போக எஞ்சிய 30% தொடக்கக் கல்வித் துறை விடைத் தாள்களை சம்மந்தப்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
திரும்பப் பெற்றுக்கொள்ள Mail அனுப்பப்பட்டுள்ளது.
3) பள்ளிக் கல்வித் துறையில் பணிநிரவலில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு, பணி நிரவல் செய்யப்பட்டு அதே பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்ட இருபது ஆசிரியர்களின் மாற்றுப் பணி ஆணைகள், நேற்று (09.08.2018) திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
4) தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
மட்டுமே நியமித்த...
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஐந்து Subject-களுக்கும் போடப்பட்ட தலா 5 சிறப்பு அமைப்பாளர்களை (EDC 25 பேர்) நேற்று (09.08.2018) திரும்ப அவரவர் பள்ளிக்குச் சென்று பணியில் சேரச் சொல்லப்பட்டுள்ளது.
No comments
Post a Comment