Header Ads

Header ADS

நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய இரண்டு குழு அமைப்பு: அரசாணை வெளியீடு


முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் குழுக்களை அமைத்து அரசு



உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, பள்ளிக் கல்வி இயக்குநரின் தலைமையில் 11 பேர் கொண்ட மாநில அளவிலான தேர்வுக்குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கல்வி மாவட்டங்கள் 67 ஆக இருந்தவை 120 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.


அதனால் விருது பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், ஆசிரியர்களை தேர்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையை அரசு கவனமுடன் ஆய்வு செய்து மாவட்ட, மாநில அளவிலான குழுவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஆணையிடுகிறது. இதன்படி, மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விருது வழங்க வேண்டும். அதில் சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம்,மதுரை, சேலம், திருநெல்வேலி, திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 144 விருதுகள், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,

சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு 130 விருதுகள், தர்மபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், தேனி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 56 விருதுகள், என மொத்தம் 330 விருதுகள் வழங்கப்பட வேண்டும். இது தவிர சுயநிதி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இருந்து தலா ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் என 32 பேர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இருந்து 2 பேர், சமூக பாதுகாப்பு பள்ளிகள் 2, மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 3 பேர் என39 பேருக்கு விருது வழங்கப்பட வேண்டும்.


மாவட்ட அளவில் உள்ள குழுவும், மாநில அளவிலான குழுவும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், நெறிமுறைகள் விவரம்:

* ஜூலை மாதம் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க கோரப்பட வேண்டும்.



* ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின்போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை மாவட்ட தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

* விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு மாவட்ட குழு சென்று அவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

* விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்க வேண்டும்.

* தலைமை ஆசிரியர்கள் 20 வருடங்களும், ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 15 வருடங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாது. ஆசிரியர்கள் கல்வி ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணிபுரிந்தவராக இருத்தல்வேண்டும்


.
* விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், தூய்மையானவராக இருக்க வேண்டும். அரசியலில் தொடர்பு இருக்க கூடாது.

* வணிக ரீதியாக செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்யக் கூடாது.

* தமிழாசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், உடல் கல்வி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் கியோரை பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாணையில் முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.