Header Ads

Header ADS

890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் கடும் முயற்சி!!



மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும்,
10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்*


*தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, அரசு அமல்படுத்தி வருகிறது*


 *இலவச நோட்டு, புத்தகம், காலணி, புத்தக பை, சீருடை, சைக்கிள், 'லேப்டாப்' என, 14 வகையான இலவசங்கள் வழங்கப்படுகின்றன*

 
*ஆனாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது, பெரும் சவாலாக உள்ளது*


*அரசு உதவி பள்ளிகளை பொறுத்தவரை, தங்கள் பள்ளிக்கான ஆசிரியர் பணியிடங்களை தக்கவைக்க, தெரு தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை சேர்க்கின்றனர்.அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாத சூழல் உள்ளது*


*2017 ஆக., 1 நிலவரப்படி, 890 தொடக்க பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் இருப்பது, ஆய்வில் தெரிய வந்தது. அதிலும், 33 பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை*


*இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்தால் மட்டுமே, அந்த பள்ளிகள் இயங்க முடியும்*


 *இல்லாவிட்டால், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு, அவற்றில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள, அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது*
 

*இதன்படி, இன்னும் ஒரு மாதத்தில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது*


*10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள், செப்டம்பருக்கு பின், அருகில் உள்ள இன்னொரு பள்ளியுடன் இணைக்கப்படும் என, தெரிகிறது*


*அதனால், 890 தலைமை ஆசிரியர்கள் உட்பட, 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, கட்டாய பணியிட மாற்றம் ஏற்படும்*


*அதனால், அதிலிருந்து தப்ப, போதிய மாணவர்களை சேர்க்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.