Header Ads

Header ADS

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.6,500லிருந்து ரூ.7,500ஆக உயர்த்தி வழங்கப்படும்


சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.6,500லிருந்து ரூ.7,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் 72ஆவது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழ்நாடு. நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 13,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்,

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்,

விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில்
 
அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது சுதந்திர போராட்ட வீரர்கள் போராடி பெற்ற இந்த சுதந்திர திருநாட்டை எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இணையாக உயர்த்தவும், குறிப்பாக தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்திட தொடர்ந்து பாடுபடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி எடுப்போம். இவ்வாற அவர் தெரிவித்தார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.