6 மாதங்களுக்கு அன்லிமிட்டட் டேட்டா மற்றும் கால்
உங்கள் பழைய மொபைலை ஜியோ நிறுவனத்திடம் கொடுத்து, புதிய 4ஜி ஜியோபோனை ரூ.501 என்ற விலைக்கும் இந்த ஆஃபர் மூலம் வாங்கி கொள்ளலாம். ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு தனது 4ஜி ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதிய ஆஃபருடன் அந்த போன் வெளியிடப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனமும் குறிப்பிட்டுள்ள போன்களை எக்ஸ்சேஞ் ஆஃபர் மூலம் அந்நிறுவனத்திடம் கொடுத்தால், ரூ.501க்கு புதிய ஜியோபோன் கிடைக்கும். 501 போக, ரூ.594 மதிப்புள்ள ஜியோவின் 6 மாதங்களுக்கான கால் மற்றும் டேட்டா பேக்கையும் இதனுடன் வாங்க வேண்டுமாம். இதில் 90 ஜிபி வரையிலான டேட்டா, அதிவேக 4ஜி ஸ்பீடில் இருக்கும்.
ஆக மொத்தம், ரூ.1095 கொடுத்து, உங்கள் பழைய போனை ஜியோவிடம் கொடுத்தால், புதிய ஜியோபோனை 6 மாத அன்லிமிட்டட் கால் மற்றும் டேட்டாவுடன் பெற்றுக் கொள்ளலாம். ரீசார்ஜ் போக, அந்நிறுவனத்துக்கு கொடுக்கும் ரூ.501 ரூபாய் கூட டெபாசிட் தொகை தான். 3 வருடங்களுக்கு பிறகு, ஜியோபோனை திருப்பி கொடுத்துவிட்டு, 501 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
No comments
Post a Comment