Header Ads

Header ADS

செல்வமகள் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் நிதி?


பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பெற்றோர்கள் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகளில் சேமிக்க வசதியாக செல்வமகள் சேமிப்பு திட்டம்
(சுகன்யா சம்ரிதி யோஜ்னா) மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.


இந்தத் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்தத் திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது.

இந்த நிலையில், செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்குப் பிரதமர் மோடி ரூ.10 ஆயிரம் வழங்குவதாகவும் இதற்காகப் பதிவு செய்வதற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி கடைசி நாள் என்றும் செய்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடியை டேக் செய்து பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று SM Hoax Slayer உண்மை கண்டறியும் இணையப்பக்கம் பரிசோதனை செய்தது. அதில், இந்தச் செய்தி போலியானது என்று தெரியவந்துள்ளது.


 
செய்தியில் தரப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து, ‘எம்மை பற்றிபகுதிக்குச் சென்றால், லிங்க்கிற்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவருகிறது.

 



இரண்டாவதாக அந்த லிங்க்கில் http://sukanya-yojna.m-indian-gov.in என்று முகவரி இடம் பெற்றுள்ளது. ஆனால், இந்திய அரசின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தின் முகவரி india.gov.in என்பதாகும். அதேபோல், அந்த லிங்க்கை கிளிக் செய்தால், நமது தனிப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்யும் பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.

மேலும், இந்த இணைய பக்கம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.