Header Ads

Header ADS

CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த,
214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.
 
 இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள்,  'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.., அறிவித்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.