Header Ads

Header ADS

மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான
ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பயிற்சி மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர ஊக்கத்தொகை ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ. 13 ஆயிரத்தில் இருந்து ரூ.20  ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரமாக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.45 ஆயிரமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
 
உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் ஆண்டுதோறும் ரூ.600 உயர்த்தி வழங்கப்படும். முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.44.17 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.