Header Ads

Header ADS

ஜனாதிபதிக்குப் பாடம் எடுத்த பள்ளி மாணவி!


சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி ஜனாதிபதி ராம்நாத்





கோவிந்துக்குப் பாடம் எடுத்துள்ளார்.
 
தத்வாவாடா மாவட்டத்தில் உள்ள ஜாவாங்காவில் உள்ள ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கல்வி நகர வளாகத்தில் உள்ள ஆஸ்தா வித்யா மந்திரில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா நேதாம் என்ற சிறுமி, நக்சல் பாதிக்கப்பட்ட தண்டேவாடா பகுதியில் வசித்து வருகிறார்.

நக்சல் படையினர் நடத்திய தாக்குதலில் தந்தையை இழந்த சந்தியா நேதாம், குடும்பச் சுமையை ஏற்றுக்கொண்டு படித்துக்கொண்டே டியூசன் எடுத்து வருகிறார். சந்தியா நேதாம்மின் இந்தத் திறமைக்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ரமன் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, அறிவியல் பாடத்தை சந்தியா நேதாம் நடத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ரமன் சிங், அம்மாநில கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் உடனிருந்தனர்.





இதுகுறித்து மாணவி சந்தியா நேதாம் கூறுகையில், "எங்கள் பள்ளிக்கு ஜனாதிபதி வந்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது. மேலும், எதிர்காலத்தில் மருத்துவராகி நாட்டுக்குச் சேவை செய்வதே என்னுடைய லட்சியம்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.