கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு ஆடி தள்ளுபடி : சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணைய குழு லோக் அதாலத் ஏற்பாடு
சென்னை : கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு ஆடி தள்ளுபடி என்ற தலைப்பில் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு லோக்
அதாலத்தை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி கடன் பெற்ற மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு வேலை கிடக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் வாங்கிய கடனின் வட்டி பல லட்சங்களை தாண்டி விடுகிறது. இதனால் வங்கி மற்றும் மாணவர்கள் இடையே சில பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்னையை போக்க நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணையக்குழு சார்பில் நீதிபதி ஜெயந்தி கடந்த மாதம் லோக் அதாலத் நடத்தினார்.
அதல்
மாணவர்களின் வட்டி குறைக்கப்பட்டு, ரூ50 லட்சம் வரை வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு வங்கிகள் மற்றும் மாணவர்கள் கேட்டு கொண்டதையடுத்து வரும் 8ம் தேதி மீண்டும் ஆடி தள்ளுபடி என்ற தலைப்பில் சிறப்பு லோக் அதாலத்தை நீதிபதி ஜெயந்தி ஏற்பாடு செய்துள்ளார். இதில் யூனியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
No comments
Post a Comment